• புதியவை

    பினீசியரும் செட்டிகளும் (நகரத்தார்) (Phoenician and cetti/sat)

    வாழ்க உறவே! சென்ற ஒரு பதிவில் பெனிசியருக்கும் சேட்டுகளுக்கும் ஒற்றுமைகளை பார்த்தோம்; இன்று செட்டிகளுக்கும் பெனிசியருக்குமான தொடர்பை காண்போம்

    பினீசியர் தங்களை பாம்பின் புதல்வர்கள் என்றும் சேட்டின் மக்கள் (Set/Seth) எனவும் கூறுகின்றனர். (sons of serpents, sons of set). மேற்குலகிற்கு நாகரிகத்தையும் கலைகளையையும் மொழியையும் கொடுத்தவர்கள்; பணத்தை உருவாக்கியவர்கள்; உயிர் எழுத்துக்களை மேற்குலகில் அறிமுகம் செய்தவர்கள்; மிகப்பெரிய கடல் வணிகர்கள்; சில ஆயிரம் ஆண்டுகள் கடலின் அரசர்களாய் இருந்தவர்கள்.
    மேற்கண்டவாறு மேற்குலகு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    பினீசியர்


    பணியாவின் பிரிவான சேட்டுகளுக்கும் பினீசியருக்கும் உள்ள தொடர்பை கடந்த பதிவில் பார்த்தோம்...

    பினீசியரும் சேட்டுகளும் 

    தமிழ்நாட்டில் வாழும் செட்டி பட்டம் கொண்ட நகரத்தார் பற்றி தான் பார்க்கபோகிறோம்; இவர்கள் நாட்டுகோட்டை செட்டியார் என அழைக்கப்படுகிறார்கள்.

    முதலில் செட்டி என்ற பெயரை நோக்கினால்,இதுவும் சேட்/Seth என்பதிலிருந்து மறுவிய வடிவமே.

    சேட் என்பதே செட்டி என்றும் சேட்டு என்றும் திரிந்தது.

    நகரத்தார்


    செட்டிகளும் கடல் கடந்து வணிகம் செய்தவர்கள்.

    அடுத்து நகரத்தாரின் வரலாற்றை நோக்கலாம்....

    இவர்களில் பூர்வீகம் நாகநாடு;அங்கிருந்து காஞ்சிக்கு வந்து பின் நாகர்கோவில், நாகப்பட்டினம் போன்ற நகரங்களை உருவாக்கியவர்கள்.

    நகரத்தாரின் வணிக சாத்துக்கள் பொருள்களை விற்க உருவாக்கிய இடங்களே நகரங்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்; அவர்களின் குலப் பெயரிலிருந்தே இது உருவாகியுள்ளது.

    chetty - City

    மேலை நாட்டில் Seth/Set என்பதே Satan என்ற சொல்லின் மூலம்; செட்டிகள் வணிக சாத்தன்கள் என அழைக்கப்பட்டனர்.

    நகரத்தாரிடம் இருந்து செல்வத்தை கண்டு பொறாமை கொண்ட சோழ மன்னன் இவர்களை சோழ நாட்டை விட்டே விரட்டியிருக்கான்; அப்போ இவர்களின் செல்வம் எவ்வளவு என பாருங்கள்.

    பூம்புகார், மகாபல்லிபுரமும் இவர்களுக்கு கீழ் இயங்கிய துறைமுகங்கள்.

    செட்டி மகன் என்னும் கோவலனின் கதை தான் சிலப்பதிகாரம்; பினீசியரும் செட் -ன் மக்கள் தான்

    நாட்டுகோட்டை நகரத்தார் தான் பிள்ளையாரை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்தவர்கள்; தமிழ்நாட்டில் உள்ள பழமையான பிள்ளையார் சிலை பிள்ளையார்பட்டியில் உள்ளது; இந்த பிள்ளையாருக்கு தேசிக விநாயகர் என்று பெயர்; தேசிக என்றால் வணிகர் என்ற பொருள்; வடநாட்டில் நோக்கினால் அங்கேயும் வணிக குலங்கள் தான் பிள்ளையார் வழிபாடு செய்கின்றனர்.

    நாகங்கள் கூட பிள்ளையார் ஏன் இருக்காருனு இப்போ புரியுதா ?



    பல குலங்கள் ஆண்ட பெருமை பேசுவார்கள்; அவற்றில் பெரும்பான்மை தற்பொழுது அவர்களில் நிலைமைக்கு ஒத்து போகாது; ஆனால் நகரத்தாரை பொருத்தவரை அவை உண்மையாகவே இருக்கின்றன. இவர்களின் வரலாறு கிடைத்தால் படித்து பாருங்கள்.

    பினீசியர் பற்றி எனது பழைய காணொளியில்

      Serpent Goddess & Sons of Serpent - https://youtu.be/egYRuDY39RY


    பலர் இவர்கள் நாகர்கள், தமிழர்கள் என பின்னூட்டமிட்டிருந்தார்கள்.

    நாகர்கள் எங்கே வாழ்ந்தார்கள் #நாகநாட்டில்

    நாகநாட்டிற்கு மற்றொரு பெயர் மணிபல்லவம்
    அந்த நாகநாட்டிற்கும் புத்தருக்கும் மிகப்பெரிய தொடர்புண்டு...
    நாகர்களை பற்றி தேடினால் முடிநாகர்கள் என்போர் கடல்அழிவிற்கு பின்பு மணிபல்லவத்தில் குடியேறியதாகவும் அவர்கள் தலையில் நாகவடிவ லட்சனையை வைத்து இருந்ததாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது...( இது அப்படியே எகிப்து அரசர்களுக்கும் பொருந்தும் அதை வேறுபதிவில் விரிவாக பார்க்கலாம்)

    மேலும் சோழநாட்டு அரசன் நெடுமுடிகிள்ளி என்பவன் புகார் நகருக்கு அடிக்கடி வந்துபோன பீலிவளை என்ற நாகர்களின் தலைவியுடன் கூடி அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறக்கிறது.அந்த பிள்ளையை நாகநாடான மணிபல்லவத்திலிருந்து அவர்களின் வணிகக்கூட்ட #கம்பளத்துசெட்டிகப்பலில் அனுப்பிவைக்கிறாள் பீலிவளை அதுவும் அங்கே இருந்த நாகர்கள் பெளத்ததை தழுவியிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக புத்தவிகாரத்தை மூன்றுமுறை சுற்றி பிள்ளை அனுப்பி வைக்கிறாள் பீலிவளை.( இப்போது இருக்கும் கோவிலை மூன்றுமுறை சுற்றுவது எங்கே இருந்துவந்தது என நோக்கவும்)
    பீலிவளையின் அப்பா பெயர் வளைவண்ணண் ( சங்கு நிறத்தவன்)
    தமிழர்கள் சங்கு நிறந்தவர்களா ? நமது நிலத்தின் பூர்வகுடிக்கு தோல் வெள்ளையாக இருக்க முடியுமா ?

    ஆதாரம் உங்கள் இலக்கியத்தில் இருந்தே
    (“உப்பளந் தழீஇ வுயர்மன னெடுங்கோட்டுப்
    பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்
    கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா
    இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற
    பூநாறு சோலை யாருமி லொருசிறைச்
    தானே தமிய ளொருத்தி தோன்ற
    இன்ன ளர்கொ லீங்கிவ ளென்று
    மன்னவ னறியான் மயக்க மெய்தாக்
    கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்
    உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்
    உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்
    மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்
    பயிலி தழ்க் கமலமும் பருவத் தலர்ந்த
    மலர்வா யம்பின் வாசங் கமழப்
    பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப
    ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்
    பொருவலரு பூங்கொடி போயின வந்நாள்
    யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே
    வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி
    நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்
    சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற
    மன்னவ னவனை வணங்கி முன்னின்று
    என்னுயி ரணையா வீங்கொளித் தாளுளள்
    அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள்
    சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்
    கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்
    பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்
    நாகநாடு நடுக்கின் றாள் பவன்
    வாகை வேலோன் வளைவணன் றேவி
    வாசமயிலை வயிற்றுட் டோன்றிய
    பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்
    இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்
    கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்
    ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது
    பூங்கொடி வாராள் புலம்ப லிதுகேள்”
    மணிமேகலை– 24: 27-61)

    இப்போ புரிகிறதா ? நாகர்கள் என்பது ஒட்டுமொத்த தமிழர் இல்லை; அது நகரத்தாரை தான் குறிக்கும்.

    நகரத்தாரின் வரலாறு படிங்க
    http://www.elaiyathangudipattinasamy.com/nagarathar.html

    உங்களுக்காக ஒரு கேள்வி ?
    நகரத்தார், ரோத்ச்சைல்ட்டுக்கு குறைந்தவர்கள் இல்லை; நகரத்து செட்டியார்கள் உருவாக்கிய வங்கிகளை பின்னூட்டமிடுங்கள்......
    நன்றி.
    - யூதா அகரன்

    தொடர்புடைய பதிவுகள்




    3 comments:

    1. நாகர்கள் யார்? என்ன மொழிக்குரியவர்கள்?[மூலத்தைத் தொகு]
      சரித்திர காலத்திற்கு முற்பட்ட, பெரும்பாலும் தமிழர்களாகவே இருந்திருக்கக்கூடிய, தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் பரந்து வாழ்ந்த இனத்தவரின் ஒரு கிளையினரே நாகர் என சேர் பொன். அருணாசலம் அவர்கள், ‘Sketches of Ceylon History' என்ற தமது நூலில் கூறுகின்றார். பன்மொழிப் புலவர் திரு.கா.அப்பாத்துரையாரோ மேலும் ஒருபடி சென்று, “நாகர்கள் தமிழராகவே தமிழகத்தில் வாழ்ந்தனர். எங்கும் வேறு இன மொழிக்கு உரியரென்ற பேச்சும் ஏற்படவில்லை. தனி இனமாகவே வாழ்ந்தனர். ஆகவே, அவர்கள் கடல்கொண்ட தமிழகத்திலோ, தமிழகம் சூழ்ந்த நிலத்திலோ இருந்த தமிழினப் பிரிவினர் என்றும், கடல்கோளின் பயனாகவோ, வேறு காரணங்களாலோ எங்கும் பரந்தவர் என்றும் கருத இடமுண்டு.” என்று குறிப்பிட்டுள்ளார். தென்னிந்தியத் தமிழகத்தின் திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆதிச்சநல்லூர் (ஆதித்த நல்லூர்) என்னும் இடத்தில் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்னர் புதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான “முதுமக்கள் தாழி”கள் (இறந்தோரின் உடலை இட்டுப் புதைக்கும் மண்சாடிகள்) அகழ்வாராய்ச்சியாளரால் சமீபத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. புதை குழிகளிலிருந்து சிலநூறு மீற்றர் தூரத்தில் மக்கள் குடியிருப்புப் பகுதியும் தொழிலகங்கள் பகுதியும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சிவப்பு, கறுப்பு நிற மண்பாண்டங்களின் உடைந்த துண்டுகளும், எலும்பில் செய்த ஆயுதங்களும், இரும்பு, செம்பு, பொன் முதலிய உலோகங்களில் செய்த பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன

      ReplyDelete
    2. https://ta.wikipedia.org/wiki/நாகர்_(தமிழகம்_மற்றும்_இலங்கை)

      ReplyDelete

    Total Pageviews