• புதியவை

    புத்தமும் தாமரையும் (Lotus on Buddhism)

    வாழ்க உறவே! நாம் சமயங்களில் தாமரை பற்றி பார்த்துவருகிறோம்; அதன் தொடர்ச்சியாக.... புத்த மதத்தில் தாமரை பற்றி என்ன சொல்கிறார்கள்   என பார்ப்போம்.



    பிற மதங்களை போலவே தாமரை புத்த மதத்தில் தூய்மையின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது

    சேற்றில் வளர்ந்த தாமரை தனித்த அழகோடு விளங்குகிறது என்பதால் தூய்மைக்கு அடையாளமாக திகழ்கிறது.

    கவ்தம புத்தர் தனது பிரச்சாரங்களில் தாமரை குறித்து கூறியுள்ளாராம்; அது பின் வருமாரு,

    எப்படி ஒரு தாமரை மலர் , நீரில் பிறந்து, நீரோடு வளர்ந்து, நீருக்கு மேல் உயர்ந்து, நீர் படாமல் நிற்கிறதோ! அதை போல, நானும் உலகில் பிறந்து, உலகோடு வளர்ந்து, உலகனிலிருந்து உயர்ந்து , உலகின் கரை படாது நிற்கிறேன். - (Pali Tipitika, Anguttara Nikaya 4.36)

    ஒரு புத்த கதையின் படி, அரசி மாயாவுக்கு புத்தர் பிறக்கும் முன் ஒரு கனவு வந்ததாம்; அதில் ஒரு வெள்ளை யானை ஒரு வெள்ளை தாமரையை கொண்டுவந்தாம்.

    இங்கே நீங்கள் வெள்ளை யானையை நினைவில் கொள்ள வேண்டும்; இது காடுகளை அழித்து பழங்குடிகளை அடிமைபடுத்தி மருதத்தை உருவாக்கிய இந்திரனின் அடையாளமுமாகும்.

    புத்தரையும், போதிசத்துவர்களையும் தாமரையில் மீது இருப்பவர்களாகவே வடிவமைப்புள்ளனர், பௌத்தர்.

    புத்தமும் தாமரையும்

    பழைய பதிவில் பார்த்தது போல, பிரம்மன் ஒரு பௌத்த கடவுள்; விண்ணகத்தின் அரசனாக பௌத்தர்களால் போற்றப்படுகிறார்.

    பிரம்மன்

    மீண்டும் சொல்றேன்; மதங்கள் எல்லாம் ஒரே குழுவால் உருவாக்கப்பட்டது; அவர்கள் கடலில் இருந்து வந்தவர்கள்.

    அடுத்த பதிவில் தாமரை பற்றி தொடர்வோம்.....

    நன்றி.
    -யூதா அகரன்
    தொடர்புடைய பதிவுகள்



    No comments:

    Post a Comment

    Total Pageviews