• புதியவை

    சூரிய தேரும் ஏழு குதிரைகளும் (Sun chariot and seven horse)

    வாழ்க உறவே....
    சூரிய வழிபாடு பற்றி ஏற்கனவே இரு பதிவுகள் பார்த்துள்ளோம்; தற்பொழுதும் அதை சார்ந்த சூரிய தேர் பற்றி பார்க்கபோகிறோம்

    உலகில் எத்திசையிலும் சூரியனின் பயணத்தை குறிக்க சூரியனை தேரில் வைத்து இழுத்து செல்வது போல உருவகப்படுத்தப்பட்டிருக்கும்; சில இடங்களில் படகில் பயணிப்பது போலவும் காட்டப்படும்.


    ஒடிசா மாநிலத்தில் கொனார்க் சூரிய கோவில் உள்ளது; இது சூரியனை முழுமுதற் கடவுளாக வழிப்பட்ட சௌரவ மதத்தை சேர்ந்தது; முதலாம் நரசிம்ம தேவனால் கட்டப்பட்டது ; பாலியல் சிற்பங்களை கொண்டது; இந்த கோவில் தேர் வடிவிலும் குதிரைகள் இழுத்து செல்வது போலவும் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த சூரிய கோவிலும் பெருமேடு வடிவ கோவிலே ஆகும்; இது சூரிய வழிபாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை மீண்டும் ஒரு முறை நிறுவுகிறது.



    புராண கிரேக்க கடவுள் Helios; ஒரு சூரிய கடவுள்; கிமு 4ம் நூற்றாண்டில் வழிபடப்பட்டவர்; இவரும் குதிரைகள் பூட்டிய தேரில் வருவதாக உருவகப்படுத்தப்படுகிறது.

    சூரிய புராணத்தில் சூரியன் ஏழு குதிரைகள் இழுத்து செல்லும் தேரில் வருவதாக உருவகப்படுத்தப்படுகிறது.

    இந்த சூரிய தேரின் ஏழு குதிரைகளும் எதைக் குறிக்கின்றன?

    ஏழு குதிரை ஒளியின் ஏழு நிறம்

    சூரியனிலிருந்து வெளிவருவது அதன் கதிர்கள் தான்; அந்த கதிர்கள் ஏழு நிறங்களை கொண்டது; வானிவில் உருவாகும் போது அதை நம்மால் பிரிந்து காண முடியும்.


    இந்த ஏழு என்னும் எண் எல்லா இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    ஏழு மலை தாண்டி....... தொடங்கி வாரத்திற்கு ஏழு நாள், ஏழு கண்டங்கள் என எல்லா இடத்திலும் ஏழு காணப்படுகிறது.


    வேறு என்ன எல்லாம் ஏழு உள்ளது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

    பாகுபலி திரைப்படத்திலும் அரசன் அமரும் சூரிய பெருமேடை குதிரைகள் இழுப்பது போல காட்டப்பட்டிருக்கும்.


    பெண் இரத்தம்

    சித்த மரபில் சூரிய கதிர்கள் பெண்ணின் பூப்பு குருதியை குறிப்பதாக கூறப்படுகிறது.

    இது ஏழு கன்னிகள் கதையை நினைவுபடுத்துகிறது.

    இந்த ஏழு முடிவில்லாமல் நீண்டு செல்கிறது ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை; இது தேடுதலின் தொடக்கம் மட்டுமே.


    மேலே குறிப்பிட்டுளவை பற்றி நீங்கள் அறிந்தவற்றை கீழே பின்னூட்டு இடவும்.

    நன்றி

    - யூதா அகரன்

    தொடர்புடைய பதிவுகள்





    No comments:

    Post a Comment

    Total Pageviews