#சென்னையில் வசிப்பவர்கள் இதை புரிந்துகொண்டால் நல்லது :-
...............விருத்திரன் சே..........................
உலகத்தில் எந்த பகுதியில் வசித்தாலும் அவர்களுக்கு இந்த நிலத்தின் அடிப்படை புரிதல் வேண்டும்....
" வெப்பம் மிகுந்தால் நீர் சுருங்கும்
நீர் சுருங்க நிலம் குலையும்
நிலத்தைக் காக்க காற்று மிகும்
காற்று மிகுந்து வெப்பம் தணிக்கும்
வெப்பம் தணிந்து நீர் மிகும்
நீர் மிகுந்து நிலத்தில் இறங்கும்
நீரை நிலம் வாங்க வேண்டும்
நிலத்தில் நீர்க் கால் இறங்க வேண்டும்
நீரை வாங்கும் நிலத்தின் வாய்கள்
தேறா மாந்தரால் மூடப்பட்டால்
நீரின் ஓட்டம் கடலில் கலக்கும்
கடல் நீர் மிகுந்து நிலத்தில் நுழையும்
நிலத்தின் வாய்கள் பிளந்து வாங்கும்
நிலத்தின் வாய்களில் கடல் நீர் இறங்கும்
நிலத்தின் கீழே நீர் மிகுந்தோடும்
நீர் மிகு நிலத்தடியில் வெப்பம் தணியும்
வெப்பம் தணிந்த நிலத்தில் எங்கும்
உயிர்கள் சிதையும்
உயிர்கள் பெருக்கம் மறைந்த நிலத்தை
ஊழி ஆடிய ஆழி என்றழைப்பர் "
சென்னையில் உள்ளவர்களே நீங்கள் இருப்பது எந்த காலகட்டம் என தெரிக்கிறதா ?
தயவு செய்து உங்கள் நிலத்தை காத்துகொள்ள விரும்புங்கள்...
இல்லை அந்த நிலம் உங்கள் கட்டுபாட்டில் இல்லையெனில் #ஊர்திரும்புங்கள் ...உங்களுக்காக உண்மையான வாழ்க்கை கிராமத்தில் காத்து கொண்டு இருக்கிறது...
#எச்சரிக்கை சென்னையில் இனி நீர் மிகும்...
அந்த நீரை நிலத்திற்குள் இறக்க வழியை தேடுங்கள்.அதையும் கடலுக்கு அனுப்பாதீர்கள்..பின்பு கடல் நீர் நிலத்திற்கு அடியில் நுழையும்...பின்பு நிலம் தன் வாயை பிளந்து உங்களை வாங்கி கொள்ளும்...
நிலதத்துவம் - ம.செந்தமிழன்
No comments:
Post a Comment