வங்கிகளை பற்றிய முகநூல் கலந்துரையாடல்
இன்றைய பொருளாதாரம்:
---------------------------------------------
இந்திய ஒன்றிய நாடு. பல தேசய இனக்கள் வாழும் ஒன்றியம். இந்நாட்டின் பொருளாதாரம் நடுவண் அரசின் ரிசர்வ் வங்கியை நம்பித்தான் உள்ளது.அதன் ஆளுநரின் கையில் தான் இந்தியப் பொருளாதாரமே உள்ளது.இந்தியப் பிரதமருக்கே சம்பளம் கிடைப்பதே நடுவண் அரசின் கருவூலம் வாயிலாகத்தான்.
நடுவண் ரிசர்வ் வங்கியிடம் சில சிறிய வங்கிகள் வட்டிக்குக் ( Repo rate ) கடன்வாங்குவார்கள் . அந்த சிறிய வங்கிகளிடம் நாம் வட்டிக்குக் கடன் (Loan interest rate ) வாங்குகிறோம். நம்முடைய மிகுதியான சேமிப்பை வங்கியில் வட்டியுடன் ( Savings interest rate ) சேமிப்பாகப் போட்டு வைக்கிறோம் . அதே போல சிறிய வங்கிகளும் அவர்களின் மிகுதிப் பணத்தை நடுவண் ரிசர்வ் வங்கியில் வட்டிக்கு ( Reverse Repo rate ) சேமித்து வைக்கிறார்கள்.சிறிய வங்கிகள் தங்களிடம் ஒரு குறைந்தபட்சத் தொகையை கையிருப்பு ( Cash reserve ratio ) வைத்திருக்கவேண்டும் என்ற சட்டத்தை நடுவண் ரிசர்வ் வங்கி இயற்றியுள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு கட்டுப்படுத்தப் படுகிறது என்று பார்ப்போம்.
1. நாட்டில் பணப் புழக்கம் அல்லது உற்பத்தி குறைந்துவிட்டால் ரிசர்வ் வங்கி தன்னுடைய ரெப்போ ரேட்டைக் ( Repo rate ) குறைக்கும். இதனால் சிறுவங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறைந்த வட்டியில் கடன் வாங்குவார்கள். இச்சிறுவங்கிகள் முதலாளிகளுக்கும் மக்களுக்கும் குறைந்த வட்டியில் ( Loan interest rate ) கடன் கொடுப்பார்கள் .இதனால் மக்களிடம் பணம் புழங்கும், தொழில் வாய்ப்புகளும் பெருகும். உற்பத்தியும் பெருகும், மக்களின் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.
2. அதே நாட்டில் பணப்புழக்கம் மிகுதியாகிவிட்டால் நடுவண் ரிசர்வ் வங்கி தனது ரிவர்சு ரெப்போ ரேட்டை ( Reverse repo rate ) அதிகரிக்கும்.உடனடியாக சிறிய வங்கிகளும் தங்களுடைய சேமிப்பு வட்டியை ( Savings interest rate ) உயர்த்துவார்கள்.இதன் மூலம் அதிக வட்டி கிடைக்கிறதே என்ற பேராசையில் மக்கள் தங்கள் கையில் இருக்கும் பணத்தை வங்கிகலேயே போடுவார்கள். சிறிய வங்கிகளும் அப்பணத்தை ரிவர்சு ரெப்போ ரேட் ஏறியதால் கிடைக்கும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு நடுவண் ரிசர்வ் வங்கியிலேயே போட்டுவிடுவார்கள் !!
3. நீ எதை எடுத்தாயோ அது இங்கு இருந்தே எடுக்கப்பட்டது; நீ எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது என்ற கீதையின் வரிகள் இன்றைய வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
4. எப்பவுமே Repo rate > Reverse repo rate , Loan interest rate > Savings interest rate இருக்கும்படிப் பார்த்துக்கொள்வார்கள்; இந்த எளிய கணித சூத்திரத்தின் மூலம் தான் வங்கிகள் இலாபம் அடைகின்றன.
5. அவசர காலத் தேவைக்காக ஒவ்வொரு சிறு வங்கியும் ஒரு கையிருப்பை ( Cash reserve ratio ) நிச்சயம் வைத்திருக்கவேண்டும்.எவ்வளவு விழுக்காடு கையிருப்பு இருக்கவேண்டும் என்று கட்டளையிடுவதே நடுவண் ரிசர்வ் வங்கிதான். இந்த விழுக்காட்டைக் குறைக்க உத்தரவு போட்டால் , மக்களுக்கு மேலும் அதிகப் பணத்தை
வட்டிக்குக் கடனுக்கு விட ஒரு சிறு வங்கிக்கு அதிகாரம் கிடைக்கும்.
வட்டிக்குக் கடனுக்கு விட ஒரு சிறு வங்கிக்கு அதிகாரம் கிடைக்கும்.
6. சில நேரங்களில் இந்தியப் பொதுத்துறை நிறுவங்களே வங்கிகளிடம் கடன் வாங்குகின்றன!! அதில் இருந்து தான் அந்த ஊழியர்களுக்கு சம்பளமே கிடைக்கிறது !!
7. இதுபோக இந்திய நாணய மதிப்பு,அந்நிய முதலீடு, அந்நியச் செலாவணி, பங்குச் சந்தை என அனைத்தும் நடுவண் ரிசர்வ் வங்கியின் பார்வையில் எந்நேரமும் இருக்கும்.
8. நடுவண் ரிசர்வ் வங்கியின் ஆளுநரின் ஒற்றைக் கையெழுத்தில் இந்நாட்டின் நூற்றிருபது கோடி மக்களின் தலையெழுத்தே மாறும் அபாயம் உள்ளது.
9. வங்கிகளின் வட்டி விகிதத்தை ஏற்றி இறக்கும் அதிகாரம் கொண்ட வங்கிகளில் வேலை செய்யும் எவனும் உழைத்து ஓடாய்த் தேய்ந்து போன உழவனைப் பற்றிக் கவனத்தில் கொள்வதில்லை. காரணம் அவனே வட்டிக்குப் பயிர்க் கடன் வாங்கியுள்ளானே !!
10. உழைப்பவனின் கதறல் இங்கே எவன் காதிலும் விழாதவண்ணம் ஒரு கொடூரக் கட்டமைப்பை ஆளும் வர்கத்தவர்கள் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்.
11. இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் பொதுவுடைமை,சோசலிசம் ,புரட்சி என இங்கே கம்புசுத்துபவர்களே கல்விக்கடன்,திருமணக் கடன்,வீட்டுக்கடன் என ஒரு வகையில் வங்கிகளிடம் கடன்பட்டவர்கள் தான். இவர்களால் எப்படி இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெற்றுத் தரமுடியும்??
12. வங்கிகளுக்கும்,கார்ப்பரேட் நிறுவங்களுக்கும் இருக்கும் இரகசியக் கூட்டணியை இன்னுமா நாம் உணரவில்லை??
13. இந்தியப் பொருளாதாரம் என்பதே மிகப் பெரிய வட்டிக்கடை என்பதை நாம் முதலில் உணரவேண்டும். வட்டி விகிதத்தை ஏற்றி இறக்கி உழைக்கும் மக்களைச் சுரண்டுவதற்குப் பெயரே பொருளாதார மேலாண்மை ஆகும்.
இந்தப் பொறியில் இருந்து தப்பிக்க ஒரே வழி தற்சார்பு வாழ்வியலும் மரபு வழிக் கல்வியும் தான் என நம் மக்களுக்குப் புரியவைக்காமல் இங்கே ஒரு புரட்சியும் சாத்தியப்படாது.மண்ணுரிமையே முதல் உரிமை என்று நம் பிள்ளைகளுக்காவது சொல்லித்தருவோம்.
கல்விகடன்
Sathiskumar Annadurai
கல்விக்கடன் = நமது வரிப்பணம் வங்கியின் வாயிலாக கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறது. அதிலிருந்து குறிப்பிட்ட பகுதி அரசு / அரசியல் அதிகாரிகளுக்கு செல்கிறது.
பணமில்லை அதனால் படிக்கவில்லை என்று சொந்த தொழில் செய்துவிடக்கூடாது. அப்படி செய்துவிட்டாள் பெரு நிறுவனங்களுக்கு வேலைக்கு யார் போவார்கள் என்பதனாலேயே கல்வி கடன் தள்ளுபடி. அந்த தள்ளுபடியும் நம் வரிப்பணமே.
தொழிலாளர் நலன் காப்பதற்காகவே ஒரு அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளதெல்லாம் அடிமைகளை உருவாக்கிடவே அன்றி முதலாளிகளை உருவாக்க அல்ல.
நீ எதை எடுத்தாயோ அது உன்னிடம் இருந்தே எடுக்கப்பட்டது. நீ எதை கொடுப்பாயோ அதையும் உன்னிடம் இருந்து தான் கொடுக்க வேண்டும்.
நாங்கள் எதையும் கொடுக்கமாட்டோம்.
இப்படிக்குவங்கி / அரசாங்கம்.
பராவாலையே கோனேல இப்படிப்பட்டவர்கள் கூட இருக்கீர்களா ஆச்சர்யமா இருக்கே
ReplyDelete