• புதியவை

    [மருத்துவம் 7]கழிவு நீக்கம் - அறிமுகம்

    இந்த பதிவில் நாம் உடல் கழிவுகளை பற்றியும், அவற்றை வெளியேற்றும் வழிமுறைகள் பற்றியும் விரிவாக பார்க்க இருக்கிறோம்.,



    கழிவு:
    எதுவெல்லாம் தேங்குகிறதோ
    அதுவெல்லாம் கழிவு.,

    உடல் கழிவுகளை நான்கு விதமாக வகை செய்யலாம்.,

    அவை:
    i) திடக் கழிவுகள்.,
    ii) திரவக் கழிவுகள்.,
    iii) வெப்பக் கழிவுகள்.,
    iv) எண்ணக் கழிவகள்.,


    உடலில் ஒரு இடத்திலோ அல்லது உறுப்பிலோ ஒரு விசயம் பயன்படுத்தாமல் அல்லது பயன்படுத்த முடியாமல் சேர்ந்திருப்பதை தேக்கம் என்கிறோம்., இது தான் கழிவு.,
    (பயன்படுத்தும் நிலையில் சேர்ந்திருப்பது சேமிப்பு., இது கழிவல்ல)


    கழிவு நீக்கத்தின் அவசியம்:

    கழிவு நீக்கம் என்பது ஆரோக்கிய சுழற்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.,
    உடலில் தேங்கும் கழிவுகளை நாம் உடனுக்குடன் வெளியேறுவது மிகமிக கட்டாயமானதாக இருக்கிறது.,

    ஏன் என்றால்., தேங்கி இருக்கும் கழிவுகள் சீரான இயக்கத்திற்கு தடையாக இருக்கும்., மேலும் உடலில் தேவையில்லாதவைகள் இருக்கும் போது தேவையானவை இருப்பதற்கு போதுமான இடம் இருப்பதில்லை., எனவே தான் கழிவுகளை நீக்க வேண்டியது மிகவும் அவசியமானதாக இருக்கிறது.,

    ஆனால், இன்று நாம் கழிவுகளை வெளியேற்றுவதாக என்னிக் கொண்டு உடலுக்கு தேவையான தாதுக்களையும், சத்துக்களையும் கழிவறைக்குள் கொட்டிக் கொண்டிருக்கிறோம்., 

    உடலில் தோன்றும் நோய்களில் முக்கால் வாசிக்கும் (75%) அதிகமான நோய்கள் கழிவுகள் தேங்குவதால் தான் ஏற்படுகிறது என்பது நிரூபிக்கபட்ட உண்மை.,

    கழிவுகளை தேங்கவிடாமல் அன்றாடம் வெளியேற்ற முடியும் எனில்  75% நோய்கள் தோன்றுவதற்கு வாய்பே இல்லாமல் போய்விடும்.,
    நம் முன்னோர்கள் கழிவு நீக்கத்தை ஒரு தனி வேலையாக பார்க்கவில்லை., அன்றாட வாழ்வியலோடு இணைந்த சில பழக்கவழக்கங்கள் மூலம் உடல் தானாக சரியான முறையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கான ஆரோக்கியமான ஒரு சூழலை ஏற்படித்தி வைத்திருந்தனர்., நாமும் அத்தகய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி ஆரோக்கியத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.,

    தொடரும்..........,
    -Dr.S.M.M.,

    No comments:

    Post a Comment

    Total Pageviews