• புதியவை

    [மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்

    மலத்தின் மூலம் வெளியேற்றிய கழிவுகள் போக மீதம் இருக்கும் கழிவுகளை அல்லது மலத்தின் மூலம் வெளியேற்ற முடியாத கழிவுகளை உடல் திரவ நிலையில் வெளியேற்றுகிறது.,


    சிறுநீர் மற்றும் வியர்வையின் மூலம் உடல் திரவக் கழிவுகள் வெளியேற்றுகிறது.,


    வெளியேற்றும் வழிமுறைகள்:

    திடக் கழிவுகளுக்கு நாம் உண்ணும் உணவு அடிப்படையாக இருப்பது போல்., திரவக் கழிவுகளுக்கு நாம் பருகும் தண்ணீர் அடிப்படையாக இருக்கிறது.,

    i) தாகம் இருந்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்:

    எப்படி பசித்தால் மட்டுமே உண்ண வேண்டுமோ அதுபோல் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீரைக் குடிக்க வேண்டும்.,

    ii) அமர்ந்து கொண்டு குடிக்க வேண்டும்:

    திரவக் கழிவுகள் சரியான முறையில் பிரிவதற்கு நாம் தண்ணீரைக் கட்டாயம் அமர்ந்த நிலையில் தான் குடிக்க வேண்டும்.,

    iii) கொப்பிளித்து விழுங்க வேண்டும்:

    தண்ணீரை அன்னாந்து குடிக்கக் கூடாது., மடமட வென்றும் குடிக்கக் கூடாது., பாத்திரத்தில் வாய் வைத்து சிறிது சிறிதாக, வாயில் வைத்து குறைந்தது மூன்று முறையாவது கொப்பிளித்து விழுங்க வேண்டும்.,

    iv) நாட்டுச் சக்கரை நீர்:

    வாரத்தில் ஒரு நாள், தண்ணீரில் நாட்டுச் சக்கரையை உங்கள் நாவிற்கு இனிப்பு தெரியும் அளவிற்கு கலந்து., அந்த நாள் முழுக்க தண்ணீருக்கு பதில் அந்த நீரை குடிக்க வேண்டும்.,

    இது திரவக் கழிவுகள் உடலில் தேங்காமல் சிறுநீரின் வழியாக வெளியேற்றவும், வெப்பக் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.,

    v) சிறுநீர்:

    சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் உடனே சிறுநீர் கழித்து விடவேண்டும்.,  அடங்கிக் கொண்டு இருக்கக் கூடாது.,
    கட்டாயம் அமர்ந்த நிலையில் தான் சிறுநீர் கழிக்க வேண்டும்., நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது.,


    இந்த ஐந்து வழிமுறைகளையும் முறையாக பின்பற்றும் போது உடலில் உள்ள திரவக் கழிவுகள் அனைத்தும் வெளியேறிவிடும்.,


    இது குறித்த மேலதிகத் தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு...................,
    What'sApp - 8056362189

    தொடரும்....,
    -Dr.S.M.M.,

    No comments:

    Post a Comment

    Total Pageviews