• புதியவை

    [மருத்துவம் 8]கழிவு நீக்கம் - திடக் கழிவுகள்:

    நாம் உண்ணும் உணவில், நமக்கு தேவையானவை பிரித்து எடுக்கப்பட்டதற்கு பிறகு எஞ்சி இருக்கும் மலமும்., ஜீரண மண்டலத்தில் உள்ள உறுப்புகளில் ஏதாவது ஒன்றில் சரியான முறையில் ஜீரணம் ஆகாமல் அங்கேயே தேங்கி இருக்கும் உணவும், உறுப்புகளில் தேங்கி இருக்கும் கொழுப்புகள் ஆக இந்த மூன்றும் திடக் கழிவுகள் என்று வகை படுத்தபடுகின்றன.,



    வெளியேற்றும் வழிமுறைகள்:

    சில முறையான பழக்கவழக்கங்கள் மூலம் உணவு கழிவாக தேங்குவதை தடுக்கவும், மலக் கழிவுகளை முழுமையாக வெளியேற்றவும் முடியும்.,

    i) பசிக்காத நேரத்தில் உண்ணக்கூடாது:

    இது ஜீரண உறுப்புகளில் உணவு கழிவாக தேங்குவதை முற்றிலுமாக தடுத்துவிடுகிறது.,

    ஆனாலும் இன்று இதை நடைமுறை படுத்துவது மிகவும் சிரமமான ஒன்று தான்., காரணம், அலுவலகம், வேலை, போன்ற புறச்சூழல்கள் கிடைக்கும் இடைவெளியில் பசித்தாலும், பசிக்காவிட்டாலும் உண்டுதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.,

    எனில் என்ன செய்யலாம்........?

    ஒரு எளிய தீர்வு இருக்கிறது., இடைவெளி நேரத்தில் பசிக்கும் படி செய்துவிடலாம்.,

    அதை எப்படி செய்வது.,

    அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்., 

    இடைவெளி நேரத்திற்கு சுமார் 40 நிமிடத்திற்கு முன் 3 அல்லது 4 நான்கு மிளகுகளை வாயில் போட்டு நன்கு மெல்ல வேண்டும், சீக்கிரம் மிளகை விழுங்கிவிடாமல் எச்சிலை மட்டும் விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும்., இப்போது சரியாக உங்கள் இடைவெளி நேரத்தில் உங்களுக்கு பசிக்கத் தொடங்கும்.,


    ii) பசித்த உடன் எதையாவது உண்டு விட வேண்டும்:

    உடல், நான் இப்போது தயாராக இருக்கிறேன், என்னிடம் எதையாவது கொடு நான் அதை எனக்கு தேவையானதாக மாற்றிக் கொள்கிறேன் என்று நமக்கு விடுக்கும் அழைப்பு தான் பசி.,
    எனவே பசி உணர்வு வந்த உடன் எதையாவது நாம் சாப்பிட்டுவிட வேண்டும்., அந்த நேரத்தில் உண்டால் தான் கழிவு சரியான முறையில் பிரியும்.,


    iii) மென்று முழுங்க வேண்டும்:

    உண்ணும் உணவு எதுவாக இருந்தாலும் சரி, அதை நன்கு மென்று உமிழ் நீரோடு நன்கு கலந்து கூலாக்கிய பிறகே விழுங்க வேண்டும்., நொருங்கத் திண்பவனுக்கு நோயில்லை என்று நம் முன்னோர்கள் அர்த்தம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை.,

    ஜீரண மண்டலத்தில் வாயைத் தவிர வேறு எங்கும் உணவை வெட்டுவதற்கோ, அரைப்பதற்கோ கத்தியோ, பற்களோ இல்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.,


    iv) உணவுக்கு இடையில் தண்ணீர் குடிக்கக் கூடாது:

    உணவை உண்ணத் தொடங்கியதில் இருந்து முடிக்கும் வரை இடையில் தண்ணீரைக் குடிக்கக் கூடாது., உணவை முழுமையாக உண்டு முடித்த பிறகு சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.,

    v) இரவு உணவிற்கு பின் சிறு நடை:

    இரவு உணவை உண்டு முடித்த உடன் அமர்ந்தோ அல்லது படுத்தோ இருக்காமல் எழுந்து ஒரு 40 எட்டுக்களாவது நடக்க வேண்டும்., 
    காரணம், இரவு உணவிற்கு பின் நாம் எந்தவித வேலையும் செய்யப்போவதில்லை என்பதாலும், ஓய்வெடுக்கப் போய்கிறோம் என்பதாலும் உடலில் ஜீரணத்திற்கு தேவையான அளவு வெப்பம் இருக்காது., உணவுக்கு பின் செய்யும் இந்த சிறு நடையால் கிடைக்கும் வெப்பத்தை இரைப்பை சேமித்து வைத்து ஜீரணத்தை முழுமைபடுத்தும்., இதனால் இரைப்பையில் உணவு கழிவாக தங்கிவிடாமல் இருக்கம்.,


    vi) மலம் கழிக்கும் உணர்வு:

    கட்டாயம் தினமும் மலம் கழித்துவிட வேண்டும்.,

    எப்படி பசி இல்லாமல் உண்ணக் கூடாதோ அதே போல் மலம் கழிக்கும் உணர்வு இல்லாமல் கழிவறைக்குள் செல்லக்கூடாது.,

    மலம் கழிக்கும் உணர்வு வருவதற்கு தினமும் காலை எழுந்த உடன் வெரும் வயிற்றில் ஒரு டம்ளர் (கொதிக்க வைக்காத) வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்., சிறிது நேரத்தில் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படும் இப்போது தாராளமாய் கழிவறைக்குள் செல்லலாம்.,

    அல்லது இரவு உணவிற்கு பிறகு ஒரு டம்ளர் (கொதிக்க வைக்காத) வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை கலந்து குடித்தால் அடுத்த நாள் காலையில் மலம் கழிக்கும் உணர்வு தன்னால் ஏற்படும்.,


    vii) கழிவறையில் அமரும் முறை:

    கழிவறையில் அமரும் போது உடலின் பெரும்பான்மையான எடை இடது காலின் மீது விழும்படி இடது பக்கம் சற்றே சரிந்து அமர வேண்டும்., காரணம், மலக்குடல் இடது பக்கம் அமைந்திருக்கிறது., இவ்வாறு அமரும் போது உடல் மலக்குடல் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தால் மலம் சிரமம் இல்லாமல் வெளியேறும்.,


    viii) நீங்கள் மட்டும் கழிவறைக்குள் செல்ல வேண்டும்:

    கழிவறை என்பது கழிவுகளை வெளியேற்றும் இடம்., அது செய்தி தாள்களை படிப்பதற்கான இடமோ, அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இடமோ அல்லது கைபேசியை பயன்படுத்துவதற்கான இடமோ அல்ல., எனவே இவற்றில் எதையும் நீங்கள் கழிவறைக்குள் எடுத்துச் செல்லவே கூடாது.,


    இந்த எட்டு விசயங்களை முறையாக பின்பற்றி இதை நமது வழக்கமாக ஆக்கிக் கொண்டால் நாம் உண்ணும் உணவு எங்கும் தேங்காமல், பிரிக்க வேண்டிய சத்துக்கள் அனைத்தும் சரியான முறையில் பிரிக்கப்பட்டு மீதம் இருக்கும் கழிவு (மட்டும்) ஆரோக்கியமான முறையில் வெளியேற்றப்படும்.,


    கொழுப்பு கழிவுகள்:

    உடலில் கொழுப்புக்கள் தேங்குவதை பற்றி அஞ்சியே இங்கு பலருக்கு மாரடைப்பு வந்துவிடுகிறது.,

    மருந்து நிறுவனங்கள் தங்களது சுயலாபத்திற்காக மக்களின் மனங்களில் இவ்வாறான அச்சங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர்.,

    கொழுப்புகள் உறுப்புகளிளும், இரத்த குழாய்களிளும் தேங்குவதால் ஆபத்தில்லை என்று நானுமே சொல்லமாட்டேன்., என்றாலும் மிகவும் கவலைப்படும் அளவிற்கு இது மோசமான விசயம் அல்ல., காரணம், மிக எளிமையான முறையில் கொழுப்புகளை வெளியேற்றிவிட முடியும்.,

    கெலச்சிக் காய் என்று ஒரு காய் இருக்கிறது., அதன் மேல் பகுதி ஓடு போல் இருக்கும் உடைத்தால் உள்ளே விதை இருக்கும்.,

    அந்த விதையை எடுத்து ஒரு விதைக்கு ஐந்து மிளகு என்ற விகிதத்தில் சேர்த்து பொடியாக்கி., இரவு உணவிற்கு பின் ஒரு டீஸ்பூன் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கழிவாக தேங்காது., ஏற்கனவே தேங்கி இருந்த கொழுப்புகள் மலத்தோடு சேர்த்து வெளியேற்றப்படும்.,


    இது குறித்த மேலதிகத் தகவல்கள், சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களுக்கு...................,
    What'sApp - 8056362189


    தொடரும்.....,
    -Dr.S.M.M.,

    No comments:

    Post a Comment

    Total Pageviews