• புதியவை

    [இலுமினாட்டி-17] வங்கிகளின் உண்மை நிலை (The real nature of banks)

    நீங்க யாராவது சிந்தித்திருக்கீங்களா ?
    வெற்று காகிதத்திற்கு எப்படி இவ்வளவு மதிப்பு வந்தது என ?
    காலம் முழுவதும் அந்த காகிதத்திற்காக அடிமை போல மானத்தை இழந்து, சுதந்திரம் இழந்து,  மகிழ்ச்சியும் இழந்து எவனுக்கோ வேலை செய்து சாக வேண்டுமா!





    எது விலை உயர்ந்தது உணவா அல்லது கணிணியா?
    உணவு தானே. ஆனால் இங்கு அப்படி தெரியவில்லையே.
    சில பேர் சொல்வார்கள் அத்தியாவசிய பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதனால்????.
    அப்படியா யார் அந்த எல்லாரும். இங்கு விவசாயி தான் பட்டினி கிடந்து சாகிறான். அப்போ யாருக்காக இந்த மலுப்பல். கணிணி தயாரிப்பவனுக்கும் மதிப்பே இல்லா காகிதத்தை அவனே மதிப்பு இருப்பதாக கூறி முதலீடு என்ற பெயரில் எதுவும் செய்யாமல் உட்கார்ந்து திண்கிறானே அவனுக்காக தானே இந்த மலுப்பல்.

                        ஏன் இப்படி இருக்க கூடாது கணிணியை கொடுத்து உணவு வாங்கி கொள்ளட்டும் ஓர் வேலை உணவு. உணவு யாரிடம் இருக்கிறதோ அவனே வாழ்வளிப்பவன். அவன் தயவாலயே நாம் வாழ்கிறோம். ஆனால் எதார்த்தத்தில் அப்படி இல்லையே. ஏன்?
    இவ்வாறு தானே உலகம் நகர்ந்திருக்க வேண்டும்.  எது இதை மாற்றியது. பொய். மாயை. 
    நிலவுடையாரிடம் தோன்ற்றிவித்த இந்த மாயை பல பரிமாணங்களை கடந்துள்ளது. அது அரசர்களின் கைகளுக்கு மாறியது.  தற்போது பெரும் செல்வந்தர்களில் கைகளில் இருக்கிறது.
    இப்படி சொல்லலாம் உலக வங்கிகளின் முதலாலிகள் கைகளில் இருக்கிறது.


                   பணம் என்ற பொய்மை உங்களுக்கு புரியும் என நம்புகிறேன். இல்லாத மதிப்பை இருப்பதாக கூறி அனைவரையும் அதை நோக்கி ஓட வைத்து விட்டனர். அதை அவர்களே அச்சிடுவதால் நாம் அவர்களை நோக்கி ஓடுகிறோம். அவர்கள் சொல்வதை நம்புகிறோம். அவர்கள் சொல்வதையே செய்கிறோம் பொதுவாக.
    இந்தியாவின் முதல் வங்கி இந்திய கிழக்கிந்தய கம்பேனியால் கொண்டுவரப்பட்டது. அதன் பெயர்   Imperial Bank Of India,British . தற்பொழுது இதன் பெயர் Reserve Bank Of India. 

    பெயர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. வேறு எதுவும் மாறவில்லை.
    இந்த வங்கி Asian clearing Union. என்ற அமைப்பால் கட்டுப்படுத்தப்படுகிறது. தலைமை இடம் ஈரானில் உள்ளது.  மேலும் இந்தியாவின் ரிசர்வ் பாங்கி ன் கீழ் தான் பல வங்கிகள் செயல்படுகின்றன. அவை இந்திய  தனியார் வங்கிகள் போல தோன்றும் ஆனால் ரோத்ஸ்சைல்ட் உடையது தான். பங்குச்சந்தை இதில் பெரும் பங்காற்றுகிறது. இதையும் இவர்களே உருவாக்கினார்கள் கட்டும் படுத்துகிறார்கள்.
    முத்தூட் வங்கி அனைவரும் அறிந்ததே.  அந்த வங்கி சிறிது காலத்திற்கு முன் பெரிய அளவில் மோசடி புகார்களை சந்தித்தது இவர்களாலேயே.


    வங்கிகளின் மோசடி

                    ஓர் வங்கி தான் வைத்திற்கும் பணத்திற்கு 16 மடங்கு லோன் வழங்கலாம். இதன் மூலம் லாபத்தை மட்டுமே வங்கிகள் ஈட்டும். இப்பொழுது வெறும் 5% பணம் மட்டுமே தாளாகவோ தங்கமாகவோ உள்ளது. மீதி அனைத்தும் கணிணியில் வெறும் எண்ணாக மட்டுமே உள்ளது. நாம் அனைவரும் ஒரே நாளில் வங்கியில் போட்ட பணத்தை எடுத்தால் வங்கியால் பணத்தை வழங்க முடியாது.
    புரியும் என்று நம்புகிறேன் நாம் அனைவரும் பணத்திற்காக ஓடுகிறோம். ஆனால் அந்த பணம் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உண்மையில் இதற்கு மதிப்பும் இல்லை.  அர்த்தமும் இல்லை.
    நாம் முட்டாளாக்கப்பட்டிருக்கிறோம்.
    (பழைய பதிவுகளை படித்தால் தான் முழுவதும் புரியும். சந்தேகம் என்றால் கீழே பதிவிடுங்க)

    நன்றி.

    2 comments:

    1. ஆகவேதான் இதே வங்கிகள் பணமில்லா சமூகத்தை நோக்கி மக்களைத் துரத்துகின்றன. So called "Cashless Society". Credit card, NFC, Apple Pay, லொட்டு லொசுக்கு எல்லாமே இதுக்குத்தான். நாளைக்கு மொபைல் போனையும், கடன் அட்டையையும் வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டாமென்று தடுப்பூசி போடுவதுபோல சிப்புகளை கட்டாயப்படுத்தி நம் உடம்பில் பதித்து விடுவர். காலம் முழுக்க அடிமைகளாய் ஜோராய் வலம் வரலாம்.

      ReplyDelete
    2. ஆமா சகோ ரவி

      ReplyDelete

    Total Pageviews